Tuesday, March 30, 2010

நரக வேதனை

நினைக்க மறக்கத இதயத்தையும்,
 மறக்க முடியாத மனதையும்,
பிரிய துணிந்த காதலியையும்,
என்னவளின் எண்ணங்களையும்,
சுமந்து கொண்டு,
வலியை வார்த்தைகளாக மாற்ற
முயல்கிறேன்! தோற்றுப்போன காதலன்!

Thursday, January 29, 2009

கல்யாணப் பெண்!

மேல தாளம் முழங்குகிறது,
குளித்து புத்தாடை உடுத்தி,
பூ மாலையிட்டு அமர்கிறாள்.
சென்ற வாரம் தான் சந்தைக்கு வந்த,
புதுக் காட்சிப் பொருள்,
கடும் போட்டிகளுக்கு இடையே,
நல்ல விலை கொடுத்து விற்றார்களாம்
கல்யாண சந்தையில்.